உள்நாட்டு செய்திகள்

வாகனம் கோரவில்லை , நிரூபித்தால் பதவி விலகுவேன் – வசந்த சேனாநாயக்க



35 மில்லியன் பெறுமதியான வாகனத்தை தான் கோரவில்லை என்றும் உறுதிபடுத்தினால் அரசாங்கத்தை விட்டு செல்ல தயார் எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

35 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை தான் கோரியுள்ளதாக தெரிவித்து, தன்னுடைய புகைப்படத்துடன் செய்திகள் வருவதாகவும், தன்னால் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமோ வாகனங்கள் கோரப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால் தான்அரசாங்கத்தை விட்டு பதவி விலகுவதாக நீர்பாசன இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த செயலானது எதிர்கட்சியின் செயலள்ள என்றும்,இது ஆளுங்கட்சியின் ஒருவருடைய சதி வேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்பாசன அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தான் அமைச்சராக பதவியேற்றது தொடக்கம் தனக்கு நீண்ட காலமாக ஒரு வாகனமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் ஒரு அமைச்சின் செயலாளர் பயன்படுத்தியது என்றும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் தான் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவன் என்றும், பொலன்னறுவை பிரதேச மக்களுக்கு சேவைசெய்ய வேண்டுமென்றால் அங்கே உள்ள பின்தங்கிய கிராமங்களுக்கு செல்வது அவசியம் என்று குறிப்பட்டுள்ளார்.

எனவே மக்களிடம் செல்வதற்கு வாகனம் அவசியம் என்றும்,ஆனால் தனக்கு சொகுசு வாகனம்அல்லாமல் சாதாரண வாகனம் என்றாலும் கவலைபட மாட்டேன் எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர்

wpengine

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

wpengine