உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாகனங்களின் விலை அதிகரிப்பின் முழு விவரம்..


ஆயிரத்துக்கும் குறைவான எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கார்கள், 2 இலட்சம் ‌ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1,800 முதல் 2,000 எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட வாகனங்கள் 9 இலட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மேற்படி இறக்குமதியாளர்கள், இது, ஹைப்ரிட் வாகனங்களில் தாக்கம் செலுத்தப்போவதில்லை என்றனர்.

அனைத்து விதமான வான்களும், இரண்டு இலட்சம் ரூபாயினால் குறைவடையவுள்ளது. இந்த விலைக் குறைப்பானது, பெட்ரோல் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மாத்திர​மே அமுலானதாகும்.

டீசலில் இயங்கும் வான்களுக்கு, இந்த விலைக்குறைப்பு இல்லை. இதேவேளை, க்ரூ கெப் ரக வாகனங்களின் விலைகளும் குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே பதற்ற நிலை – 10 பேர் கைது…

wpengine

பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த இரண்டு சிறுவர்கள் பலி…

wpengine

மீன்பிடிப் படகு விபத்து – மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு..

wpengine