உள்நாட்டு செய்திகள்

வஸ்கமுவ தேசிய வனத்தில் திருட்டு..



வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஸ்கமுவ தேசிய வனத்தில் பணியாற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய அறையில் இருந்து சில ஆயுதங்கள் நேற்று(21) இரவு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறையின் கதவு உடைக்கப்பட்டு இந்த ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் T-56 ரக துப்பாக்கி உட்பட வேறு 4 ஆயுதங்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

(rizmira)

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 7 பேர் கைது..!

wpengine

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்து

wpengine

கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில்…

wpengine