உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?



படுகொலை செய்யப்பட்ட பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கொலையாளிகளுக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அனுசரணை கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட மறைகரங்கள் முயன்று வருவதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது பல்வேறு முறைகேடுகளுக்குத் துணை நின்ற அதிகாரிகள் பலரும் தொடர்ந்தும் அதே பதவிகளில் நீடிப்பதன் காரணமாக ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து விசாரணைகளுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வஸீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ள பொலிசார் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் அனுசரணை சிறிதும் கிட்டவில்லை.

அதே போன்று வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக முக்கிய தடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த சம்பவம் கொலை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நீதித்துறைக்கும் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

wpengine

டெங்கு நோய் தொற்று காரணமாக யாழ். பல்கலை மருத்துவபீட மாணவரொருர் பலி – விஞ்ஞான பீடம் மூடல்…

wpengine

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine