உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீமின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டாமென அச்சுறுத்தல்



பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது யார் ஏன் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்பது குறித்து தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்னும், அண்மையில் தாஜுடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தாஜுடீனின் தாயாரிடம் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் தாஜுடீனினது என்பதனை உறுதி செய்ய மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் சில நபர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Related posts

தேயிலை தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும் – ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் தெரிவிப்பு!

wpengine

கடன் செலுத்தாமையால் இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்!

News Editor

இலங்கை டெஸ்ட் தொடர் சவால்மிக்கது – வீராட் கோலி

wpengine