உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது…


வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,நேற்று பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மஹர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலே, அவர் நேற்றிரவு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

wpengine

சஜின் அவரது மனைவிக்கு எதிராக நான்கு லீசிங் நிறுவனங்கள் வழக்குத் தாக்கல்

wpengine

சப்பாடு இன்மையால் பாடசாலைகளில் மயங்கி விழும் பிள்ளைகள்..!

wpengine