Top Story 1உள்நாட்டு செய்திகள்

வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் முடிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது.

இதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கான பெற்றோல் 8 லீற்றராகவும் மோட்டார் சைக்கிள்களுக்கு 7 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பஸ்களுக்கு முன்னர் 40 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 60 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு 30 லிட்டராகவும், லொறிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 75 லீற்றராகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

சரத்குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

ஜனாதிபதி மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் விசேட கலந்துரையாடல்…

wpengine

இன்று(06) முதல் அதிக வெப்பமான வானிலை…

wpengine