உள்நாட்டு செய்திகள்

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட சிறை…


வலப்பனை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை தலைவருமான ஜகத் குமார சமரஹேவாவுக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால், இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2004 ஆம் அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.யூ.பீ.கரலியத்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தண்டனைக்கு மேலதிகமாக, 105 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்யும் பின்னணியில் யார்? விரிவான விசாரணை தொடர்கிறது….

wpengine

மகரகம பகுதியில் ரயில் தடம்புரள்வு..

wpengine