Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வறண்ட காலநிலையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்திருந்தனர்.

38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்களே அப்பகுதியிலுள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடும்போது சுகவீனமடைந்துள்ளனர்.

மகுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 12 பேர் காய்ச்சலினால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குறைந்த நீருடன் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் வருவதால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

பஷில் ராஜபக்ஷ இன்று இராஜினாமா

News Editor

ஜனாதிபதி அலுவலக முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

கொழும்பில் புதிதாக 271 தொற்றாளர்கள்

wpengine