உள்நாட்டு செய்திகள்

வறண்ட காலநிலையில் இன்று முதல் மாற்றம்…



நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வறண்ட காலநிலையானது இன்று(27) முதல் மாற்றம் அடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

விஷேடமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு அதிகளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மேலும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரியுள்ளது.

(rizmira)

Related posts

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார் – அரசுக்கு எச்சரிக்கை…

wpengine

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்..!

wpengine

கொழும்பின் சில பகுதிகளில் இன்று(02) நீர் விநியோக தடை…

wpengine