உள்நாட்டு செய்திகள்

வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

இதுவரை 366பேர் பூரண குணம்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நிமல் கருத்து

wpengine

மத்தியதர குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடு…

wpengine