உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு…


நாட்டின் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 16 மாவட்டங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், 3 லட்சத்து 57 ஆயிரத்து 742 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து முக்கிய நீர்நிலைகளும் வற்றியுள்ளதாகவும் தலாவ, எப்பாவல, நல்லமுதேவ உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் வடமத்திய மாகாணத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காலநிலை காரணமாக பிரதேசத்தின் பயிர் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மிஹிந்தலை – புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine