உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு…



18 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் 17 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியால் குருநாகல் மாவட்டத்தில் 252,000 பேரும் திருகோணமலையில் ஒரு இலட்சத்து 78 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலேயே அதிகபடியாக 288,784 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வறட்சி நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

wpengine

ஹகீம் உள்ளிட்ட 5 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

ஊவா மாகாண முதலமைச்சரின் பிரேரணைக்கு முன்னாள் முதலமைச்சர் கடும் எதிர்ப்பு…

wpengine