உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…


வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குதவற்குத் தேவையான நிதி நாளை வழங்கப்படும் என்று இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திஸர குமார தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டத்தின் கீழ். தற்பொழுது அனுராதபுரம் மாவட்ட செயலகத்திற்கு நிதியில் ஒரு தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இந்த உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படும்

உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 21 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது

வறட்சியால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் கல்வியமைச்சர் பதவி வழங்கியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

wpengine

பிரதமர் மாலை தீவிற்கு விஜயம்

wpengine

விசேட தேவை உடையவர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதை இலகுபடுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள்

wpengine