உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…



பொலன்னறுவை – ஹிகுரான்கொட சதோச சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(16) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்ணப் பூச்சிகள் உள்ளிட்ட கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் குறித்த வர்த்தக நிலையத்தில், உடன் தீப்பற்றக் கூடிய சில பொருட்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ஹிகுரான்கொட விமானப் படையினர் மற்றும் மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், இதனால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

இன்புளுவென்சா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் தட்டுப்பாடுகள் இல்லை – சுகாதார அமைச்சு..

wpengine

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜினாமா…

wpengine