உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி…



பதுளை – கொக்கோவத்தை பகுதியில் இன்று(12) அதிகாலை வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டடத்திற்குள்ளிருந்த 46 வயதான ஒருவர் தீக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டடத்தில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

குறித்த தீ சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டிடத்திலிருந்து வீழ்ந்த கடற்படை வீரர் பலி

wpengine

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி

wpengine

முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் காலமானார்…

wpengine