உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நோர்வூட் நகரில் இன்று(25) காலை எரிவாயு விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் 3 வர்த்தக நிலையங்கள் தீயினால் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தினால் 3 வர்த்தக நிலையங்களில் உள்ள உபகரணங்கள் சேமடைந்துள்ளதோடு, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் நோர்வூட் பிரதேச சபையினருடன் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் நகரத்தில் தீயினை பரவ விடாமல் தடுத்ததோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாதிக்கப்பட்டோரை பாதுகாக்க சர்வதேச தலையீடு அவசியம்

wpengine

சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…

wpengine

களுபோவில வைத்தியசாலையில் குவிந்துவரும் இனந்தெரியாத சடலங்கள்..!

wpengine