உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

வர்தா புயல் – சீற்றத்துடன் கொந்தளிக்கும் கடல் (VIDEO)


வர்தா புயல் இன்று(12) பிற்பகலில் சென்னைக்கு மிக அருகே பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே கரையைக் கடக்கும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னைக்கு கிழக்கே 140 கி.மீ அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் 13 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கி வருகிறது. வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,500 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடமாற்றம் செய்யப்பட்டு வருதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்காற்று 120 கி.மீ வேகத்தில் வீசுகிறது. மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம், திருவெற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீற்றத்துடன் எழுந்து அடங்குகின்றன.

மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. கடல் அலையின் வேகத்தால் பறைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதால் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே வர்தா புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையோரம் வசிப்பவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=zRY-_dMg4_c” width=”560″ height=”315″]

Related posts

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் திறப்பு

wpengine

தடயவியல் அறிக்கை தொடர்பில் விவாதம் அவசியம்

wpengine

2017 பட்ஜட்டில் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு முழு விபரம்..

wpengine