உள்நாட்டு செய்திகள்

வர்தா புயலினைத் தொடர்ந்து உருவாகப் போகும் மாருதா புயல்..


வங்கக்கடலில் உருவான வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்தின் பாதிப்பு இன்னும் தீரவில்லை.

அதற்குள் அடுத்ததாக உருவாக உள்ள புயலுக்கு இலங்கை ‘மாருதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம், 1953ல், அட்லாண்டிக் கடற்பகுதியில் துவங்கியது. உலக வானிலை அமைப்பு மூலம் கடல்களின் அடிப்படையில், 10 வகை பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. கரீபியன் கடல், வடக்கு மெக்சிகோ, வடகிழக்கு பசிபிக் பெருங்கடல், வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக், வடமேற்கு பசிபிக், தென் சீனக் கடல், ஆஸ்திரேலியா, வட இந்திய பெருங்கடல், தென் மேற்கு இந்திய பெருங்கடல் போன்றவற்றை சார்ந்த நாடுகளை இணைத்து, பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

வர்தா புயலால் இயல்பு நிலை இன்னும் திரும்பாத நிலையில் இந்திய பெருங்கடலில் விரைவில் புயல் ஒன்று உருவாக உள்ளது.

இந்த புயலுக்கு புயலுக்கு, இலங்கை வழங்கிய, ‘மாருதா’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் 22 பேர் பூரண குணம்

wpengine

வாக்காளர் அட்டை விநியோகம் – விசேட தினம் இன்று

wpengine

சாகல ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine