உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விசேட நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..



இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விசேட நீதிமன்றம் நாட்டுக்குத் தேவையற்றதொன்று என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி. சில்வா இது குறித்து தெரிவிக்கையில்;

நாட்டில் உள்ள நீதிமன்றங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளே தற்போது நாட்டுக்கு தேவையானது. வழக்குகள் தாமதமாவதை தவிர்ப்பதற்கு வேறு நடவடிக்கைகள் முன்மொழியப்பட வேண்டும். அதற்கு மாறாக புதிதாக நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டியதில்லை எனவும், இதனால் சட்டத்துறையில் சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

####

Related posts

பணிப்புறக்கணிப்பிற்கு முற்றுப்புள்ளி

wpengine

தடுப்பூசிகளை இந்த இடங்களில் இன்று பெற்றுக் கொள்ளலாம்

wpengine

சஜின் வாஸின் பிணை நிபந்தனைகளை தகர்க்க நீதிமன்றம் அனுமதி.

wpengine