உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பு இன்று தீர்மானம்…



2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் தெரிவிக்கையில்; இன்று(16) காலை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira

Related posts

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – மேலும் அறுவர் கைது…

wpengine

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்தது GMOA…

wpengine

முன்னாள் ஜானாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க FCID முன்னிலையில் ஆஜர்

wpengine