உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரவு – செலவுத்திட்டம் 2017 – ஐ.தே.க – சு.க இன்று கலந்துரையாடலில்..


எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் 2017, தொடர்பில், இன்று(25), அமைச்சர்களுக்கு இடையிலான தீர்க்கமான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில், நிதி அமைச்சின் அலுவலகத்தில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு – செலவுத்திட்டக் குழுவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரவு – செலவுத்திட்டக் குழுவும் கலந்துகொள்ளுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, தன்னுடைய வரவு – செலவுத் திட்ட யோசனை தொடர்பான ஆவணத்தை, நிதி அமைச்சரிடம் கையளித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் நடைபெறும் கலந்துரையாடலின் போது, அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் பேசப்படும் என்றும், தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம்

wpengine

பரீட்சைகள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

wpengine

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம்

wpengine