வணிகம்

வரலாற்றில் 02வது மிகப்பெரிய முதலீடு கொழும்பு பங்குச் சந்தையில்..



இலங்கை பங்கு சந்தை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய முதலீடு கடந்த 10ம் திகதி பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

ஜுலை மாதம் 10ம் திகதி வரையில் கொழும்பு பங்குச் சந்தையில் இந்த வருடத்தின் மிகப்பெரிய முதலீடு பதிவாகியுள்ளது. அதன் பெறுமதி 22.8 பில்லியன் ரூபாவாகும்.

பங்குச் சந்தை வரலாற்றில் பதிவாகிய இரண்டாவது மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு இதுவாகும்.

2013ம் ஆண்டு பதிவாகிய 22.7 பில்லியன் ரூபா என்ற இரண்டாவது மிகபெரிய முதலீட்டு பெறுமதியை கடந்த ஜுன் மாத முதலீட்டு பெறுமதி உடைத்துள்ளது.

பங்குச் சந்தை வரலாற்றில் பதிவாகிய மிகப்பெரிய முதலீடு 2012ம் ஆண்டு பதிவாகியதாகும். அது 38.6 பில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடாகும்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் 65.5 பில்லியன் பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் விற்பனை பெறுமதி 41.7 பில்லியன் ரூபாவாகும்.

 
(rizmira)

Related posts

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

wpengine

வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோருக்கும் EPF…

wpengine

சர்வதேச தர விருதுகள் 2016ல் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள BMICH

wpengine