Uncategorized

வரப் போகிறது அசத்தல் பைக்



கவாஸாகி நிறுவனம், 5 லட்ச ரூபாய்க்கு மேல் விலையுள்ள பைக்குகளின் மார்க்கெட்டில், அதிகரித்து வரும் போட்டி காரணமாக, வெள்ளை, கறுப்பு, பச்சை நிறங்களில், வெர்சிஸ் 650 என்ற அட்வென்ச்சர் பைக்கை, டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த பைக்கின் தோற்றம், வெர்சிஸ் 1000 போல இருந்தாலும், உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார்கள், அட்ஜஸ்டபிள் விண்ட் ஸ்கிரின் மற்றும் லீவர்கள், சொகுசான இருக்கைகள், இந்திய சாலைகளுக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் என அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றன.

6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், 70 bhp பவரை வெளிப்படுத்தும் 2 சிலிண்டர் 649சிசி லிக்விட் கூல்ட் FI இன்ஜின், வெர்சிஸ் 650 பைக்கில் பொருத்தப்படுள்ளது. மேலும் அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ், ஆஃப் செட் மோனோஷாக், அலாய் ஸ்விங் ஆர்ம், பெட்டல் டிஸ்க் ப்ரேக்ஸ் – [முன்பக்கம் இரண்டு மற்றும் பின்பக்கம் ஒன்று] என அதிக வசதிகள் பைக்கில் இடம் பெற்றுள்ளது.

Related posts

சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை

wpengine

15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என அமைச்சர் நளிந்த நம்பிக்கை

Azeem Kilabdeen

கடந்த வருட க.பொ.த சா/த பரீட்சை பெறுபேற்றில் வலயத்தில் முதலிடத்தில் திருமலை சாஹிரா கல்லூரி

wpengine