உள்நாட்டு செய்திகள்

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் கைது…



வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 13 சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட மாணவர்கள் உந்துருளிகளில் புதிய மாணவர்கள் இருந்த இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 13 பேரும் குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் இன்று(21) முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

Related posts

இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பம் ஈராக்கிற்கு தலைமறைவு

wpengine

கோவக்ஸ் தடுப்பூசிக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

இலங்கையின் முதல் ஒளியியல் மாயை பாதை கண்டுபிடிக்கப்பட்டது..!

wpengine