ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வயதாவதை தடுக்கும் மருத்துவ முயற்சியில் முதல் வெற்றி



மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளுள் ஒன்றாக காணப்படுவது என்றும் இளமையுடன் இருப்பதாகும்.

என்னதான் ஆயுட்காலத்தை அதிகரிக்க நோய் தடுப்பு மருந்துகள், சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வயதாவதை தடுக்க இதுவரை முடியவில்லை.

ஆனால் இதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்துக்கொண்டே இருந்தனர்.

உடற் கலங்களில் ஏற்படும் மூப்படைதலே மனிதர்களின் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே கலங்களில் காணப்படும் பரம்பரை (Gene) அலகில் மாற்றங்களை மேற்கொள்வதன் ஊடாக வயதாதலை தடுக்க முடியும் என்ற கோணத்தில் மும்முரமாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தது.

இம் முயற்சியின் முதற்படி வெற்றியடைந்துள்ளதாக Bioviva USAInc எனும் அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரியான எலிசபெத் பாரிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

DNA இல் காணப்படும் ஒவ்வொரு நிறமூர்த்தங்களின் (Chromosome) முடிவிலும் காணப்படும் Telomeres எனும் பகுதிகளே மூப்படைதலை ஏற்படுத்துகின்றன.

எனவே Telomeres வில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இச் சிகிச்சையினை வெற்றிகரமானதாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

15 கைவிரல்கள், 16 கால்விரல்களுடன் பிறந்த குழந்தை

wpengine

உலகின் இரண்டாவது நுரையீரலும் பற்றி எரிகிறது (PHOTOS)

wpengine

கன்னி கழியாத பெண் : ஊடகங்களுக்கு கசக்கும் உண்மைகள்

wpengine