உள்நாட்டு செய்திகள்

வட மாகாணத்தில் அரச பேருந்து சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம்…



வட மாகாணத்தில் அரச பேருந்து சேவைகள் அனைத்தும் இன்று(28) காலை முதல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் இன்று(28) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள நிலையில் அரச பேருந்து சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

வட பிராந்திய பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் யாவும் இயங்கவில்லை என்பதுடன், அங்கு பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே சந்திப்பு…

wpengine

மக்கள் வங்கியின் நவீனமயப்படுத்தல் தொடர்பான கொள்முதல் சிக்கல் குறித்து கோப் குழு அறிக்கை கோருகிறது.

wpengine

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

Azeem Kilabdeen