உள்நாட்டு செய்திகள்

வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்படும் ஹர்த்தாலுக்கு வடமாகாண சபையும் ஆதரவு..



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(27) நடத்தப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வடமாகாண சபை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிந்து பொறுப்புகூற வலியுறுத்தி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை நடைபெறவிருந்த வடமாகாண சபையின் 91ஆவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு சபை கூடிய நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களுடைய நியாயமான கோரிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படுகிறது.

(rizmira)

Related posts

தேபானம அரலிய உயன சந்தியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு..

wpengine

அனுமதிப் பத்திரம் இன்றி பயணிக்கும் தனியார் பேரூந்துகளுக்கான தண்டப் பணத் அதிகரிப்பு…

wpengine

லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி…

wpengine