உள்நாட்டு செய்திகள்

வட மத்திய மாகாண சபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…



வட மத்திய மாகாண சபைத் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, இன்று(18) சபையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

அந்த மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து குறித்த இந்த பிரேரணையை முன்வைத்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொள்ள மாகாண சபை செயலாளரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சபை அமர்வுகளை எதிர்வரும் 8ம் திகதி வரை அவைத் தலைவர் ஒத்திவைத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், புதிய தலைவரை நியமித்து சபை நடவடிக்கைகளை கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

(rizmira)

Related posts

தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள்

wpengine

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று(01)…

wpengine

முகக்கவசம் அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி

wpengine