உள்நாட்டு செய்திகள்

வட்டரக்க விஜித தேரர் தலைமையில் ‘வாளி’ சின்னத்தில் புதிய அரசியல் கட்சி…



தேசிய நல்லிணக்க முன்னணி எனும் பெயரில் ‘வாளி’ சின்னத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் குறித்த கட்சியின் தலைவரும், செயலாளருமான வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சி தற்போழுது தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனவும், பதிவு செய்யப்பட்டதும் கட்சியின் கொள்கைகளும், திட்டங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன, மத, மொழி, பேதங்களின்றி நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் எனவும், இக்கட்சியின் முக்கிய பதிவுகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், சங்கரன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு

News Editor

இந்த வருடத்தில் மூன்றாவது தடவையாக மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது – சஜித் பிரேமதாச..!

wpengine

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

wpengine