உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வடமாகாண முதலமைச்சர் சி.வி. உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ்



வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வரை, ஆஜராகுமாறு  உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.

இம்மாதம் 12,13 மற்றும் 17ஆம் ஆகிய தினங்களிலேயே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஏனைய நால்வர்களில் வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அந்த மாகாண சபையின் செயலாளர் எஸ் பத்மநாதன் ஆகியோரும் அடங்குவர்.

வடமாகாண சபையில் சமஷ்டி யோசனையை முன்வைத்து நாட்டை பிரிப்பதற்கும் பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொண்டதன் பின்னரே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.

(நன்றி – வன்னி ரொமேஸ் மதுசங்க)

Related posts

முல்லைத்தீவிலுள்ள பாடசாலை ஒன்றில் வெடிப்புச் சம்பம், 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…

wpengine

உள்ளூராட்சி தேர்தல் – அங்கத்தவர்கள் குறித்த வர்த்தமானி ​விரைவில்..

wpengine