உலக செய்திகள்

வடகொரியா மற்றும் அமெரிக்கத் தலைவர்களின் இரண்டாவது சந்திப்பு…



(FASTNEWS-AMERICA) வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இன்று(27) மற்றும் நாளை(28), நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதத்தில்தான் முதல் முறையாக பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபரும், வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் சந்தித்தனர்.

இருப்பினும், சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதேவேளை, இன்று மாலை தனியாகச் சந்திக்கும் இருநாட்டுத் தலைவர்களும், பின்பு இரவு உணவுக்காக தங்கள் குழுவினருடன் கலந்துகொள்வார்கள் எனவும் நாளை இரு தரப்பிலும் தொடர் சந்திப்புகள் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்தச் சந்திப்பின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஜெயலலிதாவுக்கு மோடியிடமிருந்து 1,000 கோடி

wpengine

டுவிட்டரின் ‘புளூ டிக்’ குறியீடு – மாதம் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணம்..! எலான் மஸ்க் அதிரடி..!

wpengine

இந்தியாவில் சிறந்த நடிகராக மோடி – குஷ்பு புகழாரம்

wpengine