உலக செய்திகள்

வடகொரியா அணு ஆயுத சோதனை குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது ஐ.நா..



வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக ஐ.நா. சபை இன்று(04) கூடுகிறது.

இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் காரணமாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

வட கொரியா நடத்திய அணு குண்டு பரிசோதனை கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இந்தியாவும் வடகொரியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில். வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனைகள் குறித்து ஐ.நா. சபையில் விவாதிக்க வேண்டுமென அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ், பிரட்டன் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதில் வடகொரியா பிரச்சனை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

 

Related posts

ஜெயாவின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாட்களுக்கு துக்க தினமாக அறிவிப்பு (VIDEO)

wpengine

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங்.

wpengine

புழுதிப்புயலால் 40 பேர் பலி…

wpengine