உள்நாட்டு செய்திகள்

வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக் கூடிய சாத்தியம்…


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று(03) உருவாக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்ற நிலையில் அது மேலும் விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு குறித்த திணைக்களம் கோரியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Related posts

உலகக் கிண்ண மேற்கிந்திய குழாம் பெயரீடு..

wpengine

வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

wpengine

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

wpengine