உலக செய்திகள்

வங்காளதேச ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 9 தொழிலாளர்கள் பலி..



வங்காளதேசத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. ஆடை ஏற்றுமதியில் சீனாவிற்க்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக தொழிலாளர்களை வங்காளதேசம் கொண்டுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80% இலாபத்தை ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் பெற்றுத் தருகின்றன.

இந்நிலையில், டாக்காவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக கொதிகலன் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உடல் கருகி பலி ஆகினர். இதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும், பலர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
(rizmira)

Related posts

11 விமானங்களின் சேவைகளுக்கு உடனடித் தடை…

wpengine

இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..!

wpengine

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து – 22 பேர் பலி

wpengine