உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லொத்தர் சபையை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வருவது சட்டத்திற்கு முரணானது..



தேசிய லொத்தர் சபையானது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை சட்டவிரோதமானது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று(22) தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் இது குறித்து கூறுகையில்;

லொத்தர் சபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டே, லொத்தர் சபையை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யாது வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர் சபையை கொண்டு வருவது சட்டத்திற்கு முரணானது.

குறித்த இந்த விடயத்தை திருத்தி அமைப்பதா இல்லையா என்பது குறித்து பிரதமர் அல்லது ஜனாதிபதி நாடாளுமன்றில் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

wpengine

சனத் நிஷாந்தவின் எரிந்த வீட்டுக்கு இரண்டு கோடி காப்புறுதி இழப்பீடு

wpengine

மேலும் 219 பேர் வீடுகளுக்கு

wpengine