Top Story 2உள்நாட்டு செய்திகள்

லெபனான் வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் ஒருவருக்கு காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவரகம் தெரிவித்துள்ளது.

வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இலங்கை தூதரகம் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது லெபனானில் மூன்று நாட்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 4,000 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

25,000 ரூபா தண்டப்பண சட்டம் குறித்து மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள்..

wpengine

உயிர்த்த ஞாயிறு தெரிவுக் குழுவுக்கு 24ம் திகதியன்று ஊடகங்களுக்கு அனுமதியில்லை

wpengine

T-20 தொடரிலிருந்து மாலிங்க நீக்கம்…

wpengine