உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லெசில் டி சில்வா’வை பதவியிலிருந்து விலக்கவில்லை – ஜனாதிபதி செயலாளர்


பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு இது குறித்து குறிப்பிடுகையில்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த லெசில் டி சில்வாவை பணி நீக்கவோ அல்லது விலக்கவோ இல்லை.

இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஓராண்டாக காணப்பட்டது.

அதனாலேயே, ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்ட போது செயலாளர் பதவிக்காக எச்.டபிள்யு.குணதாஸ நியமிக்கப்பட்டார்.

செயலாளராக கடமையாற்றிய லெசில் டி சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்காது வேறு ஒருவரை அதற்காக நியமிக்கப்பட்டதனைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

இன்னும், புதிதாக செலயாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள குணதாஸ ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியொருவர் எனவும், ஆணைக்குழுவின் பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ள குணதாஸ சிறந்த முறையில் பங்களிப்பு வழங்குவார் எனவும் பீ.பி. அபயகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்

Azeem Kilabdeen

பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம்…

wpengine

சரண குணவர்தனவிற்கு பிணை [UPDATE]

wpengine