உள்நாட்டு செய்திகள்

லுனுகம்வெஹர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) – லுனுகம்வெஹர – பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயமடைந்து தெபரவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின் போது நேற்றிரவு(16) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோடஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine

கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை(14) ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம்..

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine