உலக செய்திகள்

லிபியா கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து -3 குழந்தைகள் உயிரிழப்பு- 100 பேர் மாயம்…



லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 100 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த படகின் எஞ்சினில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

படகில் மொத்தம் 120 அகதிகள் சென்றுள்ளனர். அவர்களில் 16 பேரை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

படகில் பயணம் செய்தவர்கள் மொராககோ, காம்பியா, ஜாம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தம்…

wpengine

பெண் உரிமையை நசுக்கும் தலிபான்

wpengine

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு?

News Editor