உலக செய்திகள்

லிபியாவில் வான்தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலி…



லிபியாவில் இராணுவம் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நிகழ்த்திய வான்தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லிபியாவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிரெனைகா பிராந்தியத்தில் உள்ள டெர்னா நகரம் மதவாத பயங்கரவாதிகள் மற்றும் டெர்னா முஜாகீதின் ஷூரா கவுன்சில் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அவர்களிடம் இருந்து இந்த நகரை மீட்க லிபிய தேசிய இராணுவப்படை நீண்டகாலமாக போராடி வருகிறது. அதன் ஒரு அங்கமாக அந்த நகரில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து இராணுவம் வான்தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம், டெர்னா நகரில் உள்ள தார் அல்-ஹமார் மாவட்டம் மற்றும் அல் பட்டாயா ஆகிய இடங்களில் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இந்த வான்தாக்குதல் சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வான்தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட அப்பாவி மக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். வான்தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க இராணுவம் மறுத்துவிட்டது.

Related posts

அமெரிக்காவில் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை – டிரம்ப் திட்டம்…

wpengine

கட்சியை வழிநடத்துவதில் இருந்தும் ஒதுங்குவேன்

wpengine

கடவுளுக்கு நிகராக சவுதி அரசரை பாராட்டிய கட்டுரையாளருக்கு வேலை தவறியது..

wpengine