உலக செய்திகள்

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – பொதுமக்கள் வெளியேற்றம்


லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் பகுதியில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குடியிருப்பில் வசித்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர்.

பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஸ்பெயினின் பார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் இதுவரை 13 பேர் பலி..

wpengine

சீனாவில் ரிச்டர் 6.4 க்கு நில நடுக்கம்

wpengine

பங்களாதேஷில் பாலியல் அடிமைகளாக சித்திரவதைக்கு உள்ளாகும் ரோஹிஞ்ச சிறுமிகள்…

wpengine