உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லண்டனில் கைதான இலங்கையர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை..



(FASTNEWS | COLOMBO) – லண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கடந்த 11ம் திகதி லண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்து குறித்த நான்கு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் மெட்ரோபொலிட்டன் பொலிசாரினால் எவ்வித அறிவித்தல்களும் அந்நாட்டு தூதுவராலயத்திற்கு இதுவரையில் வழங்கப்படவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கைதான நபர்களை இங்கிலாந்து Bedfordshire பொலிசில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

(R.RISHMA)

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழைப்பாணை….

wpengine

கொரோனா : பலி எண்ணிக்கை 116

wpengine

உணவு பரிமாறுகையில் கையால் தொட்டால் கடும் நடவடிக்கை…

wpengine