உள்நாட்டு செய்திகள்

லஞ்ச ஊழல் மோசடி குறித்த விசாரணைகளை தொடர சுங்கத் திணைக்களத்தால் இடையூறு



லஞ்ச ஊழல் மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சுங்கத் திணைக்களம் இடையூறு ஏற்படுத்தி வருவதாக சுங்கத் திணைக்களம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய லஞ்ச ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தடை ஏற்டுத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு, நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

அண்மையில் சுங்க அதிகாரிகள் சிலர் பன்னிரண்டரை கோடி ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தக் குறித்த சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான குறித்த அதிகாரிகள் வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்தல் தொடர்பில் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வாகன உதிரிப்பாக இறக்குமதி தொடர்பிலான சுங்கத் திணைக்கள ஆவணங்களை காணவில்லை எனவும், சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்க சுங்கத் திணைக்கள அதிகாரி காலம் தாமதித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இந்த சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனினும், சுங்கத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட விசாரணை குறித்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளன.

இந்த சம்பவம் குறித்து இன்று வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு சுங்கத் திணைக்கள அதிகாரி உபாலி செனரத்தை இன்று லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை அளிக்கமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

வடக்கிற்கு வெகுவிரைவில் விஜயம் செய்வேன் : பிரச்சினைகளை தீர்க்க அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் – சுகாதாரத்துறை அமைச்சர்..!

wpengine

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்

News Editor

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பு…

wpengine