உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

லசித் மலிங்கவின் இடத்திற்கு ஜெரோம் டெய்லர் இணைப்பு



மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு பதிலாக மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீண்டநாட்களாக முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கிண்ண போட்டியிலும் அவர் விளையாடவில்லை. காயம் குணமடைந்து மும்பை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சியடையாததை அடுத்து ஐ.பி.எல். தொடரில் இருந்து அவர் விலகிவிட்டார்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ள அறிக்கையில், காயம் அடைந்த மலிங்கவிற்கு பதிலாக மும்பை அணியில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லரை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ண பயிற்சிப் போட்டியில் ஆஸி வெற்றி…

wpengine

நாட்டை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வஜிர அபேவர்தன..!

wpengine

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொட இன்று(13) மீளவும் CID முன்னிலையில்…

wpengine