உள்நாட்டு செய்திகள்

றம்புக்கணை துப்பாக்கிச்சூடு சம்பவம்! களத்திற்கு அழைத்துவரப்பட்ட பொலிஸார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கடந்த மாதம் றம்புக்கணை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸாரை களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் கோரி பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்து, மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக றம்புக்கணைக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன என்பவர் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸார்

அதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது கேகாலை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை கள ஆய்வுக்காக இன்று றம்புக்கணை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு குற்றப் புலனாய்வு பொலிஸார் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் போது அப்பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

Related posts

60 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

wpengine

“மக்களை தவறாக திசை திருப்புகின்றார் சார்ள்ஸ் எம்.பி” பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட்…

wpengine

லண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை..

wpengine