உள்நாட்டு செய்திகள்

ரோஹிதவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு மீளவும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு



(FASTNEWS| COLOMBO) – முன்னாள் அமைச்சர் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடி விசாரணைக்குழுவின் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி மீளவும் ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த சாட்சி விசாரணைகள் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி மற்றும் செப்டம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ளது.

2004ம் வருடம் முதல் 2006ம் ஆண்டு வரையில் தனது வருமானத்தை மீறி முறையற்ற விதத்தில் 41.2 மில்லியனுக்கும் அதிக சொத்து சேர்த்ததாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எவன்காட் நிறுவன கணக்காளர் சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக தீர்மானம்

wpengine

ஆகீல் முஹமட் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்..

wpengine

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலை மூன்று இரவுகளுக்கு மூடப்படும்..

wpengine