உலக செய்திகள்

ரோஹிங்கியா அகதிகளுக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்ய வங்கதேச அரசு தடை..



மியன்மார் – ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்வதை வங்கதேச அரசு தடை விதித்துள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அண்டை நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு ‘சிம்’ விற்பனை செய்வதற்கு வங்கதேச அரசு தடை விதித்து, அந்நாட்டின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அகதியாக எங்கள் நாட்டுக்கு வரும் அகதிகளை வரவேற்கிறோம், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறோம். அதே நேரத்தில் எங்கள் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம்.

இதனால், அலைபேசி வைத்திருக்கும் அகதிகளுக்கு சிம் கார்டு வழங்கப்படமாட்டாது என்று அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சர் தரனா ஹாலிம் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

வீரியம் காணும் ஒமிக்ரோன்

wpengine

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழப்பு…

wpengine

பலஸ்தீனத்தின் தலைநகராக ஜெரூசலத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்…

wpengine