உலக செய்திகள்

ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிப்பு…



ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ள 6 லட்சம் ரோஹிங்கியா அகதிகளில் 58 சதவீத குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அந்தக் குழந்தைகள் குறித்து ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) கடந்த 8 வாரங்களாக நடத்திய ஆய்வின் அறிக்கையை ஜெனிவாவில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அந்த அறிக்கையில், “முகாம்களில் உள்ள குழந்தைகளில் 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அகதிகளுக்கு சுத்தமான நீர், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டும் எனவும் சுத்தமான நீர் குடிக்காவிட்டால் கொலரா போன்ற நோயால் பாதிக்கப்படுவர் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை எனவும் அவர்களை பாதுகாக்கும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவி செய்வதற்கு ஐ.நா. 434 மில்லியன் டாலர் நிதி திரட்டி வருகிறது. அதில் ஆறில் ஒரு பங்கு அங்குள்ள குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும்” என குறித்த அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உலக நாடுகள் வடகொரியாவினை மிரட்டக் கூடாது – ரஷ்ய ஜனாதிபதி புதின்..

wpengine

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Azeem Kilabdeen

வடகொரியாவில் கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு..

wpengine