உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரோயல் பார்க் கொலை விவகாரம்: ரதன தேரரால் சிஐடியில் முறைப்பாடு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் கொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை மையப்படுத்தி இன்று (23) சிஐடியில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.

ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டையைக் கொண்டு கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ கடந்த 2019 நவம்பர் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

மரண தண்டனை விதிக்கப்ப்ட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்ப்ட்டுள்ளது. இந் நிலையிலேயே 2019 நவம்பர் 9 அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த குற்றவாளியை விடுவிக்க தான் பணம் பெற்றதாக கூறப்படுவதை மறுத்திருந்தார்.

எனினும் அவருக்கு மன்னிப்பளிக்க, அவரது குடும்பத்தாரை தன்னிடம் அழைத்து வந்து தொடர்ச்சியாக கோரிக்கை அளித்தவர் ரத்ன தேரர் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததுடன், குற்றவாளியின் குடும்பத்தினரிடமிருந்து பிறிதொரு தரப்பு பணம் பெற்றுள்ளதாகவும், கூறினார்.

இந்நிலையிலேயே தனது பெயரையும் தொடர்புபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து குறித்து ரத்ன தேரர் முறைப்பாடளித்துள்ளார்.

Related posts

உதய கம்மன்பிலவிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine

சமூக ஊடக வலையமைப்புக்களை அடக்க முடியாது – ஊடகப் பிரதி அமைச்சர்

wpengine

மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

wpengine